நாட்டில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்று மத்திய, சப்ரகமுவ, மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் 75 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துளளது.
இதேவேளை, கஜ புயலின் தாக்கத்தினால் யாழ். மாவட்டத்தில் 2,793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
கடும் காற்று மற்றும் மழையினால் 16 வீடுகள் முழுமையாகவும் 483 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது 2 தற்காலிக முகாம்கள் மாத்திரமே காணப்படுவதுடன், 45 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவர்களுக்கான நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இடர்முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கிராம சேவையாளரின் தகவல்களுக்கு அமைய, பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணங்களை வழங்குமாறு வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.