தேசிய மாவீரர் தின நினைவேந்தலை பல இடங்களிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாவடி முன்மாரியில் மிகவும் உணர்வுபூர்வாக அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பில் மாவீரர் தின நினைவேந்தலில் விடுதலைப் புலிகளின் சின்னங்கள். கொடிகள் மற்றும் பாடல்கள் என்பன பாவிப்பதற்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இருப்பினும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மாவடி முன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆயிரக்கணக்கானவர்களின் கண்ணீர் சிந்த மழை நீர் துளிகளுடன் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
மண்முனை தென் மேற்கு பிரதேச மக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெருமளவான மாவீரர்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.
மாலை 6.05 மணியளவில் மாவீரர் நினைவு மணி ஒலிக்கபட்டு பிரதான தீபச்சுடரை மேஜர் பயில்வானின் தாயார் ஏற்றிவைக்க மாவீரர்களை நினைவுகூரும் தீபச்சுடர்கள் ஏற்றப்பட்டது.