அம்பாறை – உஹன பிரதேச பாடசாலை ஒன்றின் இரு மாணவக் குழுக்களுக்கிடையில் நேற்று (27) பிற்பகல் இடம்பெற்ற மோதலில் 28 மாணவர்கள் விசாரிக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்ட பின்னர், நிபந்தனையின் அடிப்படையில், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனரென, உஹன பொலிஸார் தெரிவித்தனர்.
காதல் விவகாரம் சம்பந்தமாகவே மாணவக் குழுக்களுக்கிடையில் இந்த முறுகல் நிலை ஏற்பட்டதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
க.பொ.த சாதாரண தர மாணவர்களே, பாடசாலையில் ஆண்டிறுதிப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்விவகாரம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதன் பேரில், பாடசாலைக்கு விரைந்த பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களைப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, பின்னர் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது பரீட்சைக் காலம் என்பதாலும் மோதலில் ஈடுபட்டவர்கள் மாணவர்கள் என்பதாலும் தாம் மாணவர்கள் மீது நீக்குப் போக்குடன் நடந்துகொண்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.