புதிய பிரதமர் நியமிப்பது தொடர்பில் இலங்கை அரசியலில் தற்போது புதிய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அதற்கமைய ஐக்கிய தேசிய கட்சி சார்பில் 3 பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான திலக் மாரப்பன, ரஞ்சித் மத்தும பண்டார, ராஜித சேனாரத்ன ஆகிய 3 பேர்களின் பெயர்கள் இவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவுக்கு மீண்டும் பிரதமர் பதவி வழங்கப்படாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல முறை சுட்டிக்காட்டியுள்ளார்.
எப்படியிருப்பினும் ரணில் விக்ரமசிங்கவை தவிர ஐக்கிய தேசிய கட்சியில் வேறு எந்த ஒரு உறுப்பினருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் பதவி வழங்கப்பட கூடாதென்ற முடிவிற்கு ஐக்கிய தேசிய கட்சி ஒருமனதாக தீர்மானித்துள்ளது.
எப்படியிருப்பினும் எதிர்பார்க்காத நபர் ஒருவர் பிரதமர் பதவிக்காக பெயரிட கூடும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நேற்று அறிவித்துள்ளார்.