100 முக்கியமான மருந்துப்பொருட்களுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதில் 60 மருந்துகள் மிகவும் அத்தியாவசியமானவை எனவும் ராஜித தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது கண்டி வைத்தியசாலையில் புற்றுநோய் மருந்துக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. அத்துடன் நீர்வெறுப்பு நோய்க்கு பயன்படுத்தப்படும் எவ்வித ஊசி மருந்துகளும் இல்லையென்றும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.