இலங்கை உள்ளிட்ட நாடுகள் ரேபிஸ் என்ற வைரஸ் தொற்றை இல்லாது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனம் இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் தாக்கத்தினால் உலகளாவிய ரீதியாக 59 ஆயிரம் பேர் வரையில் வருடாந்தம் மரணிக்கின்றனர். அத்துடன் இந்த நோயானது ஒவ்வொரு 9 நிமிடங்களுக்கு ஒருமுறையும், ஒரு மனிதரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலைமை இந்தியா, இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் அதிகமாக இருக்கிறது.
உலக அளவில் உள்ள ரேபிஸ் நோயாளர்களில் 45 சதவீதமானவர்கள் இலங்கை உள்ளிட்ட தென் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளிலேயே இருப்பதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
மனிதர்களுக்கு ரேபிஸ் நோய், நாய்களிடம் இருந்தே அதிக அளவில் பரவுகின்றது என்று, உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென் கிழக்காசிய பணிப்பாளர் பூனம் கெத்ராபல் சிங் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் ஊடாகவும், வீட்டில் வளர்க்கப்படுகின்ற மற்றும் கட்டாகாலி நாய்களுக்கு அவசியமான ஊசி மருந்ததை செலுத்துவதன் ஊடாகவும் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.