எதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பான சகல பிரச்சினைகளுக்கும் தற்போது தீர்வு காணப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மண் பியதாச தெரிவித்துள்ளார்.
களனி பல்கலைகழகத்தில் நேற்று இடம்பெற்ற செயலமர்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எதிர்கட்சி தலைவர் தொடர்பில் நிலவிய பிரச்சினை முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளது.
அது தொடர்பான சட்ட நியதிகளை ஆராய்ந்து வருகிறோம். எதிர்வரும் ஜனவரி மாதம் முதல்வாரமளவில் எதிர்கட்சி தலைவர் அலுவலகம் மகிந்த ராஜபக்ஷவிற்கு கிடைக்க பெறும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மண் பியதாச தெரிவித்துள்ளார்.