கிழக்கு மாகாண  அதிபர் இடமாற்றங்கள் ரத்து  ஆசிரியர் இடமாற்றங்கள் ரத்து என்பது பிழையான செய்தி!

 
கிழக்கு மாகாண அதிபர் இடமாற்றங்கள் யாவும் ரத்துச்செய்யப்பட்டுள்ளன.  இதற்கான மாற்று புதிய இடமாற்றங்கள் எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடைபெறுமென கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் மேலதிக மாகாணக் கல்விப்பணிப்பாளர் எஸ்.மனோகரன் தெரிவித்தார்.
 
‘கிழக்குமாகாண ஆசிரியர் இடமாற்றங்கள் இரத்து ‘ என்ற இன்று (05) வெளியான நாளிதழொன்றில்(வீரகேசரி) நான்கூறியதாக வெளிவந்த செய்தி பிழையானது என்று தெரிவித்த அவர் ஆசிரிய இடமாற்றங்கள் வழமைபோன்று நடைபெறுமென்றும் தெரிவித்தார்.
 
ஆசிரிய இடமாற்றங்கள் ரத்து என் நான் யாரிடமும் கூறவில்லை.
 
மட்டக்களப்பு பிரஜைகள் அபிவிருத்தி மையத்தின் அ.செல்வேந்திரன் தலைமையிலான குழுவினர் என்னைச்சந்தித்து மாவட்டத்தின்  குறித்த பாடசாலை ஒன்றின்  அதிபர் தொடர்பாக கலந்துரையாடியபோது அதிபர் இடமாற்றங்கள் ரத்துச்செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்திருந்தேன். 
 
கிழக்கு மாகாண அதிபர்கள் இடமாற்றப்பட்டியல் வெளியானபோது அதில் பல குறைபாடுகளிருப்பதாக பலராலும் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து அது ரத்துச்செய்யப்பட்டிருந்தது. அதற்கான புதிய விண்ணப்பங்கள் கோரப்பட்டு இடமாற்றங்கள் செய்யப்படுமென்று அவர் மேலும் தெரிவித்தார்.
 
ஆசிரியர் இடமாற்றங்களுக்கான மேன்முறையீட்டு இடமாற்றசபை அமர்வுகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. ஆசிரியர் தொழிற்சங்கப்பிரதிநிதிகளுடனான அந்த அமர்வுகள் (06) நிறைவடையலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதன்பின்னர் ஆசிரியர்களுக்கான இடமாற்றக்கடிதங்கள் விரைவாக அனுப்பிவைக்கப்படுமென்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts