மாகாண அபிவிருத்தி அமைச்சு என்று பெயர் மாற்றம் செய்வதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த வேண்டுகோளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொண்டுள்ளார் என, கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.
வடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சு உருவாக்கப்பட்டுள்ள போதும், கிழக்கு அபிவிருத்தி அமைச்சு உருவாக்கப்படவில்லை. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டி, வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சு என அதனைப் பெயர் மாற்றம் செய்யுமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கூட்டமைப்பு கோரியிருந்தது. அதனை அவர் ஏற்றுக் கொண்டார்.
தமது பகுதிகளில், அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பான அமைச்சரவை முடிவுகளை எடுக்க முன்னர், தம்முடன் கலந்துரையாட வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு மாகாண பிரதிநிதிகள் கோரியிருந்தனர்.
அந்தப் பொறிமுறையை உருவாக்கவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார். எனினும், பொறிமுறையை உருவாக்குவதற்கான காலவரம்பு ஏதும் வகுக்கப்படவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.