மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம் நடாத்திய தைப்பொங்கல் விழா முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலய முன்றலில் சனிக்கிழமை காலை 9 .00 மணிக்கு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்ஷணாகௌரி தினேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான எம்.உதயகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்தார் சிறப்பு அதிதியாக மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் சி.புஷ்பலிங்கம் அவர்களும்இ கௌரவ அதிதிகளாக மாவட்ட கலாச்சார ஒருங்கிணைப்பாளர் த.மலர்ச்செல்வன்இ மகிழடித்தீவு சுகாதார வைத்திய அதிகாரி கலையரசி துரைராஜசிங்கம் ‘வேர்ல்ட் விஷன்’ நிறுவனத்தின் முகாமையாளர் இருதயம் மைக்கேல் ஆகியோரும் கலந்து கொண்டனர்
இப்பொங்கல் விழாவிலே தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்வுகளான மத்தள இசைஇ உழவர் வசந்தன் கூத்துஇ சிலம்பாட்டம்இ நாட்டார் பாடல் போன்றன இடம்பெற்றன. இவை மட்டுமல்லாது நிகழ்வை மேலும் சிறப்பிக்கும் முகமாக 24 கிராமப்பிரிவுகளில் இருந்தும் வெவ்வேறு வகையான 24 வகை பொங்கல் தயாரிக்கப்பட்டமை சிறப்பம்சமாக காணப்பட்டது. பாரம்பரிய நாட்டுப்புற கலைகளை வெளிக்காட்டிய கலைஞர்களுக்கு அரசாங்க அதிபரால் பாராட்டுகளும் கௌரவிப்பும் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதேச சபை அதிகாரிகள் பாடசாலை மாணவர்கள் பிரதேச பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்