தாழங்குடா பிரதேசத்திற்கு அறுபது இலட்சம் ரூபாய் பெறுமதியான செயற்றிட்டங்கள் – ஞா.சிறிநேசன்

தாழங்குடாக் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் அவர்கள் 2019.01.30 புதன்கிழமை திறந்து வைத்தார். தாழங்குடா பிரதேசத்திலிருந்து தமிழரசு கட்சி சார்பாக பிரதேச சபைக்கு தெரிவாகிய ஆ.சிவலிங்கம் அவர்களின் தலைமையில் செய்து முடிக்கப்பட்ட இரு வீதிகளையும் மற்றும் மட்/தாழங்குடா ஸ்ரீ விநாயகர் மகா வித்தியாலய அதிபர் சா. மதிசுதன் அவர்களின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பாடசாலை உள்ளக விளையாட்டு மைதானத்தையுமே அவர் பாவனைக்காக திறந்து வைத்தார்.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் கம்பெரெலிய துரித கிராமிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தாழங்குடாவில் ஸ்ரீ வீரமா காளியம்மன் கோயில் வீதி மற்றும் மாளிகை வீதி ஆகியன தாழங்குடா, மண்முனை கிராம அபிவிருத்திச் சங்க ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொங்கிறிட் இடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வீதி திறப்பு நிகழ்வினை அடுத்து தாழங்குடா ஸ்ரீ விநாயகர் மகா வித்தியாலய விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்ட கௌரவ சிறிநேசன் அவர்கள் தமது உரையில் தாழங்குடா கிராமத்திற்கு அறுபது இலட்சம் ரூபாய் பெறுமதியான செயற்றிட்டங்கள் தன்னால் மேற்கொள்ளப் பட்டுள்ளதுடன், அதில் இவ் மைதானம் உட்பட்ட செயற்றிட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப் பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவுதம், அதற்கு எமது பிரதேச சபை உறுப்பினர் சிவலிங்கம்; அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.

மேலும் தாழங்குடா பிரதேசம் பெரியதொரு நிலப்பரப்பை கொண்டிருப்பதால் இங்கு இன்னும் பல தேவைகள் இருப்பதுடன் எதிர்வரும் காலங்களில் அவற்றை நிறைவேற்றுவதற்கு வழிவகுக்கப்படும் எனவும் பாடசாலை வளர்ச்சி பற்றியும், காரணமான அதிபர் சா.மதிசுதன் அவர்களுக்கு பாராட்டினையும் தனது உரையில் தெரிவித்துக் கொண்டார்.

Related posts