இலங்கையின் 71ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை(4.2.2019)காலை 8.30 மணியளவில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் மிகவும் சிறப்பான முறையில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும்,அரசாங்க அதிபருமான மாணிக்கம்-உதயகுமார் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானாவும் மற்றும் மாவட்ட அரசியல்வாதிகள், மாவட்ட திணைக்களத் தலைவர்கள்,பிரதேச செயலாளர்கள், மாட்ட திட்டமிடல் பணிப்பாளர்,அரச உத்தியோகஸ்தர்கள்,பாடசாலை மாணவர்கள்,உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளார்கள்.
இதன்போது பாரம்பரிய கலாச்சார நிகழ்வுடன் அதிதிகளை வரவேற்றல், தேசியகொடியேற்றல்,பொலிஸ் மரியாதை அணிவகுப்பு,தலைமையுரை,அதிதிகள் உரை,மாவட்ட செயலகத்தில் சிரமதானம்,பூசை வழிபாடுகள் என்பன இடம்பெறவுள்தாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் சுதந்திரதின நிகழ்வுகள் களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில் பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் நடைபெறவுள்ளது.கொடியெற்றல்,தேசிய கீதம் இசைத்தல்,மும்மத அனுட்டானம்,இன்றைய சுதந்திரதினத்தின் சிறப்புக்கள் என்பன இடம்பெறவுள்ளது.இதேவேளை வெல்லாவெளி பிரதேச செயலகத்திலும் சுதந்திரதின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.