வாகரை பிரதேச ஒருங்கினைப்பு குழுக் கூட்டம் வாகரை பிரதேச செயலகத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கினைப்பு குழுவின் இணைத் தலைவருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதன்போது பிரதேசத்தின் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.குறிப்பாக கல்குடா வலயக் கல்விப்பணிப்பாளர் தினகரன் ரவியினால் வாகரை பிரதேசத்தின் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வளப் பற்றாக்குறையாக உள்ளதாக இதன்போது கருத்து முன்வைக்கப்பட்டது.
வாகரை பிரதேசத்தின் மதுரங்கேனிக்குளம், கொக்குவில், ஓமடியாமடு, கட்டுமுறிவு போன்ற கிராமங்களில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கல்குடா வலயத்தில் உள்ள 83 பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் மேலதிகமாக 50 ஆரம்ப கல்வி ஆசிரியர்கள் கிடைக்கும் போது இந் நிலமையினை சீர் செய்ய முடியும் என்று தெரிவித்தார்.
விடயத்தை கேட்டறிந்து கொண்ட இணைத்தலைவர் சீ.யோகேஸ்வரன் உரிய நடவடிக்கையினை இயன்றளவு மேற்கொள்ளவுள்ளதாகவும் இதற்கான விபரத்தினை எழுத்து மூலம் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
அத்துடன் பிரதேசத்தில் சட்ட விரோத மதுபான உற்பத்தி செய்யப்படுதாகவும் அதனை கட்டுப்படுத்த பொலிசார் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பொலிசாரை இணைத்தலைவர் சீ.யோகேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.