(நாவிதன்வெளி தினகரன் நிருபர்
எம்.ஏ.ஆர்.எம்.முஸ்தபா )
கல்முனைக் கல்வி மாவட்டத்திலுள்ள சம்மாந்துறைக் கல்வி வலயத்தில் அதிபர் வெற்றிடம் உள்ள கமுஃசதுஃஹொலிகுரோஸ் மகா வித்தியாலயம், கமுஃசதுஃசென்றல்கேம்ப் ஜி.எம்.எம்.வித்தியாலயம், கமு/சது/மஜீத்புர வித்தியாலயம்¸ கமு/சது/அஸ்-ஸபா வித்தியாலயம், கமு/சது/மல்லிகைத்தீவு வித்தியாலயம், கமு/சது/மல்கம்பிட்டி முஸ்லிம் கலவன் வித்தியாலயம், கமு/சது/சம்மாந்துறை அல்-மதீனா வித்தியாலயம், கமுஃசதுஃஸ்ரீ நாவலர் வித்தியாலயம், கமு/சத/சீர்பாததேவி வித்தியாலயம், கமு/சது/லீடர் ஜுனியர் வித்தியாலயம், கமு/சது/சண்முகா வித்தியாலயம், கமுஃசதுஃநாவிதன்வெளி அல்-ஹிறா வித்தியாலயம் ஆகிய 12 பாடசாலைகளுக்கு தரம் பெற்ற அதிபர்களை நியமிக்கும் பொருட்டு கடந்த 2018 டிசம்பர் மாதம் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. அதே போன்று கல்முனைக் கல்வி வலயத்திலுள்ள கமுஃகமுஃஅல்-மிஸ்பா வித்தியாலயம், கமுஃகமுஃமருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயம், கமுஃகமுஃநற்பிட்டிமுனை சிவசக்தி மகா வித்தியாலயத்திற்கும் இவ்வண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் சேவையில் நியமனம் பெற்ற அதிபர்கள் இப்பாடசாலைக்காக விண்ணப்பித்துள்ளனர். ஆகவே, பாரபட்சமற்ற முறையில் மேற்படி பாடசாலைகளுக்கு நேர்முகப்பரீட்சை நடாத்தி தரம் பெற்ற அதிபர்களை நியமிக்குமாறு சம்மந்தப்பட்ட கல்வி வலயங்களின் பணிப்பாளர்களிடமும், கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரிடமும், மாகாணக் கல்விச் செயலாளரிடமும் கிழக்கு மாகாண அதிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சு மற்றும் கணக்காய்வுத் திணைக்களம் என்பனவற்றின் பரிந்துரைக்கமைவாகவே இப்பாடசாலைகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.