எதிர்வரும் 19 ஆம் திகதி மட்டக்களப்பு பழைய பாலத்திற்கு அருகாமையிலிருந்து காந்தி பூங்கா வரை நடைபெறவிருக்கும் மாபெரும் நீதிக்கான மக்கள் எழுர்ச்சிப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர்களின் சங்கத்தினரால் இன்று 14 ஆம் திகதி திருக்கோயில் 01 வாஹீஸ்டர் வீதியில் அமைந்துள்ள மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி கருத்துத் தெரிவிக்கையில்….
நடைபெற்றுக்கொண்டிருக்கும் 40 வது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமர்வின் போது இலங்கையில் யுத்தகாலங்களில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அதன் அறிக்கையினை மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ளார்.
அதனடிப்படையில் இலங்கைக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடகிழக்கு தழுவிய ஹர்த்தால் கடையடைப்பு மற்றும் மக்கள் எதிர்ப்புப்பேரணி என பல்வேறுவிதமான எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.
அந்தவகையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள நீதிக்கன மக்கள் எழுர்ச்சிப்பேரணிக்கு அணிதிரலுமாறு அம்பாறை மாவட்ட வர்த்தக சங்கம் மீனவர் சங்கம் ஆசிரியர் சங்கம் ஆட்டோ சங்கம் மாணவர் ஒன்றியங்கள் வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் அரச மற்றும் அரச சாரா அமைப்புக்களின் பிரதிநிதிகள் காணாமல் போன எமது உறவுகளின் சொந்தங்கள் ஊடகவியலாளர்கள் என பலரையும் இப்பேரணியில் ஒன்றிணைந்து வலுச்சேர்க்கைமாறு அரைக்கிற்றோம்.
அதன் பிரகாரம் 19 ஆம் திகதி காலை பொத்துவில் தொடக்கம் பெரிய நீலாவணை வரையில் 10 பஸ்கள் ஏற்பாடு செய்துள்ளோம் அதன்படி இப்போராட்டத்தில் கலந்துகொள்ளவிரும்புபவர்கள் காலையில் குறுத்த பஸ்களில் பிரயாணத்தை மேற்கொண்டு எதிர்ப்புகளை வெளிப்படுத்த முடியும் என்பதை இவ்விடத்தில் கூறுக்கொள்ள விரும்புகின்றேன். என தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
இச்சந்திப்பின் பின்னர் துண்டுப்பிரசுரம் விநியோகித்தமை விசேட அம்சமாகும்