அரசாங்கத்தின் இறுதி வரவு – செலவுத்திட்டத்தையே, பழைய நிதியமைச்சர் விமர்சிக்கின்றார் என எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான இறுதிநாள் விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.
இந்த இறுதிநாள் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முத்தம் கொடுத்து கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தவரே, தற்போது விமர்சனம் செய்கின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் சிறந்த நிதியமைச்சர் என சர்வதேச விருது பெற்ற, நிதியமைச்சரை நீக்கிவிட்டுதான், புதிய நிதியமைச்சர் நியமிக்கப்பட்டார். புதிய நிதியமைச்சர் பழைய நிதியமைச்சருக்கு முத்தம் கொடுத்து வரவேற்றார். ஆனால், இந்த அரசாங்கத்தின் இறுதி வரவு – செலவுத்திட்டத்தையே, பழைய நிதியமைச்சர் விமர்சிக்கின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.