நாடுமுழுவதும் இன்று (சனிக்கிழமை) இரவு 10 மணி முதல் நாளை காலை 4.00 மணிவரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை கல்முனை, சம்மாந்துரை, சவளக்கடை ஆகிய பகுதிகளில் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
நாட்டின் பல பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து இலங்கை அசாதாரன சூழ்நிலையில் காணப்படுகிறது. எந்த நேரத்திலும் எதுவேண்டுமென்றாலும் நடக்கலாமென்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. இந்நிலையில் பாதுகாப்பு, மற்றும் சோதனை நடவடிக்கைகளுக்காக இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.