நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி தமிழ் மாணவர்களின் கல்வியில் கைவைத்து தமிழ் சமூகத்தை பின்னோக்கி நகர்த்த எத்தனிக்கும் ஒருவர் ஆளுநராக இருக்க தகுதியுள்ளவரா என பரிசீலிக்கப்பட வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தற்போதைய நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமாகிய தவராசா கலையரசன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
இப்பொழுது கிழக்கு மாகாணத்தில் பாடசாலை மட்டத்தில் பல்வேறு இடமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த இடமாற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஏனெனில் அதிகஸ்ர பிரதேசங்களில் உள்ள வெற்றிடங்களை பயன்படுத்தி நியமனங்களை பெற்றவர்கள் இன்றைய சூழலை பயன்படுத்தி இடமாற்றம் இடற்று வருகின்றன.
குறிப்பாக தமிழ் பாடசாலைகளிலே இந்த இடமாற்றங்கள் நடைபெறுகின்றன. தமிழ் மாணவர்களது கல்வியையே பாதிக்கும். இவ்வாறான திட்டமிடப்பட்ட இடமாற்றங்கள் தமிழ் சமூகத்தை பின்னோக்கி நகர்த்திச்செல்லும்.
குறிப்பாக சில பாடசாலைகளில் மூன்றுபேர்,ஐந்து பேர் ஒரே நேரத்தில் இடமாற்றப்பட்டிருக்கிறார்கள். இது தமிழ் பாடசாலைகளில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தும்.
இவ்வாறு இடமாற்றங்களை செய்கின்ற அதிகாரிகள் ,அரசியல்வாதிகள் நிலைமை கருத்திற்கொண்டு பரீசீலித்து பதிலீட்டு ஆசிரியர்களை நியமித்து விட்டு இடமாற்றங்களை செய்திருக்க வேண்டும். இதுவே நியாயமானதாகும்.ஒருசிலரின் தேவைகளை நிறைவேற்ற பல இடமாற்றங்கள் இடம்பெறுவதாக அறிகின்றோம்.
மாணவர்களது பாதுகாப்பையும், பிரதேசத்தின் பாதுகாப்பையும் பேணிக்கொள்ளவே அரச படையினரும்,பாதுகாப்பு குழுவும் இணைந்து பாடசாலை மட்டத்தில் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இது பொதுவாக நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் இடம்பெற்று வருகின்றன. சோதனைகளின் போது குறிப்பிட்ட ஒரு சமூகத்தை பாதிக்காத அளவிற்கு பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கடமைப்பாடுகள் எமக்கு இருக்கின்றது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்