அனைத்து முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர் ராஜினமா செய்ய தீர்மானித்துள்ளனர்.
இந்த ராஜினாமா இன்று (03) திங்கட்கிழமை மாலை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் ஆளும் கட்சியின் பின் வரிசை எம்.பிக்களாக தொடர்ந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர் MS அமீர் அலி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் HMM ஹரீஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்