கிழக்கு மாகாண தமிழ்மொழித்தின போட்டியில் கமு சது நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலய மாணவர்களின் குழு நடனம் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.
அக்கரைப்பற்று இராமகிருஷ்ணமிஷன் தேசிய பாடசாலையில் கடந்த சனிக்கிழமை (06) நடைபெற்ற மாகாண மட்ட தமிழ்மொழித்தின போட்டியிலேயே போர் தொடர்பான குழு நடனத்தை மாணவர்கள் அரங்கேற்றினார்கள். இதற்கு முன்னர் மாவட்ட மட்டப் போட்டியில் இக்குழுவினர் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டமான தேசிய மட்டத்திலும் தாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு மாணவர்கள் பயிற்சிகளில் ஈடுபடுவதோடு இதற்கான தயார்படுத்தல்களை பொறுப்பான ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் வெற்றியை நோக்கிய பயணத்துக்கான ஒத்துழைப்பினை பாடசாலை அதிபர் மற்றும் ஏனைய ஆசிரியர்கள் வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.