முத்தமிழ் வித்தகர் விபுலாநந்தர் அடிகளின் 72வது நினைவு தினம் நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையில் பிரதி அதிபர் திரு. சொர்ணேஸ்வரன் தலைமையில் நடைபெறற்து.
இதில் பிரதி அதிபர்களான திரு. மதிமோகன், திரு. தரணீஸவ்ரன் ஆகியோரின் பங்கேற்புடன் பிரதம அதிதியாக முன்னாள் நுண்கலை தலைவர் பேராசிரியர் மௌனகுரு கலந்து சிறப்பித்தார்.
மேலும், மட்டக்களப்பு கல்வித் திணைக்களத்தைச் சேர்ந்த ஆசிரியா ;ஆலோசகர், உதவிக் கல்விப்பணிபப்hளர் ஸ்ரீபவன் கலந்து சிறபப்pத்ததோடு, லண்டன் பழைய மாணவ சங்க உறுப்பினர் கிரிதரன் மற்றும் அம்மன் கோயில் பூசகர் கலந்துகொண்டனர்.
மாணவர்கள் விபுலநந்தர் அடிகளின் திருவுருவப்படத்தினை ஊர்வலமாக கொண்டு சென்றதோடு, மட்டக்களப்பு சிவாநந்தா தேசிய பாடசாலை, கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இவ் ஊர்வலத்தில் கலந்து சிறப்பித்தனர்.
அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு பிரதம அதிதியான பேராசிரியர். மௌனகுரு, கோயில் பூசகர், பழைய மாணவர் சங்க லண்டன் கிளை உறுப்பினர் கிரிதரன், இலங்கை ஆசிரிய சங்க மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் பழைய மாணவருமாகிய பொன்னுத்துரை உதயரூபன் ஆகியோர் மலர்மாலை அணிவித்து வணங்கினர்.
மேலும், ஆசிரியர்கள் மற்றும் மாணவாக்ளின் பங்களிப்புடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவாக்ளின் வரவேற்பு நடனமும் பரிசளிப்பும் நடைபெற்றது.
இப்புனித அடிகளாரின் நினைவு தினத்தில் மாணவத் தலைவாக்ளுக்கு பட்டம் சூட்டும் விழா சிரேஷ்ட ஆசிரியா கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றதோடு தெரிவு செய்யப்பட்ட சிறப்பான செயல்மிக்க 5 மாணவர்களுக்கு பரிசளிபபு; நடைபெற்றது. இந்நிகழ்வில் பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர். காலையில் அடிகளாரின் நினைவுக் கல்லறைக்கு சிவானந்தா தேசிய பாடசாலை பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், மற்றும் கல்லடி விவேகானந்தா பாடசாலை அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவமாணவிகள் மலர்மாலை அணிவித்து சிறப்பித்தனர். இதில் மட்டக்களப்பு மாநகர முதல்வரும் சிவானந்தா தேசிய பாடசாலை பழைய மாணவருமாகிய திரு .சரவணபவன் மற்றும் முன்னாள் வலயக்கல்விப்பணிபப்hளர் திரு. கே. பாஸ்கரன் ஆகியோரும் கலந்து அன்னாரின் நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவித்து சிறப்பித்தனர்.