இரண்டாவது நாளாக பாண்டிருப்பில் உண்ணாவிரதப்போராட்டம்.

இலங்கையை சர்வதேச குற்றவியல்  நீதிமன்றில் பாரப்படுத்த வலியுறுத்தி லண்டனில் முன்னெடுக்கப்படும் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு ஆதரவாக நேற்று(6) சனிக்கிழமை இரண்டாவது நாளாக அம்பாறை மாவட்டத்தில் சுழற்சிமுறை உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது.
 
அம்பாறை மாவட்டத்தில் கல்முனையையடுத்துள்ள பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் தொடரும் இச்சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப்போராட்டத்தில்  கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் தர்சினி பி2பி அம்பாறை மாவட்ட இணைப்பாளர் பிரதீபன் அம்பாறை மாவட்ட காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி செல்வராணி உட்பட பலர் பங்குபற்றியுள்ளனர்.
 
பொத்துவில் நீதிவான் நீதிமன்றினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட  கல்முனைமாநகரசபைஉறுப்பினர் ராஜன் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் தர்சினி பி2பி அம்பாறை மாவட்ட இணைப்பாளர் பிரதீபன் அம்பாறை மாவட்ட காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி செல்வராணி ஆகியோரும் இப்போராட்டத்தில் குதித்துள்ளனர்;
 
பொத்துவில் நீதிவான் நீதிமன்றம் கடந்த 3ஆம் திகதி  தொடக்கம் எதிர்வரும் 07ஆம் திகதி வரை  இந்தத்தடையுத்தரவைப்  பிறப்பித்திருந்ததமை தெரிந்ததே.
இதுஇவ்வாறிருக்க நல்லூரிலும் மட்டக்களப்பிலும் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப்போராட்டம் தொடர்ந்து 4வதுநாளாக நடைபெற்றுவருவது தெரிந்ததே.

Related posts