உலகத் தமிழர் சதுரங்கப் பேரவை (WTCF) மற்றும் நோர்வே தமிழ்ச்சங்கம் இணைந்து நடாத்திய இணையவழி சதுரங்கச் சுற்றுப் போட்டி

உலகத் தமிழர் சதுரங்க ஒன்றியம் நோர்வே தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து 20.12.2020 அன்று சர்வதேச ரீதியாக Online மூலம் வயது எல்லை அற்ற (Open to any age) சதுரங்கப் போட்டி ஒன்றை நடாத்தியிருந்தது. இப் போட்டியானதுBlitz எனப்படும் (அதிவேகம்) 5 நிமிடங்களை கொண்ட வேகப் போட்டியாக அமைந்திருந்தது. சுவிஸ் முறையில் (Swiss System)9 சுற்றுப் போட்டிகளாக  நடத்தப்பட்டது. இந்த சதுரங்கப் போட்டியில் உலகின் 17 நாடுகளைச் சார்ந்த சுமார் 350  போட்டியாளர்கள் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 வயது எல்லை அற்று அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளக்கூடிய  ஒரு போட்டியாக இது அமைந்திருந்தது, இப்போட்டியில்  இலங்கையில் இருந்து மட்டும் 58% வீதமானவர்கள் விண்ணப்பம் செய்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது. அத்துடன்  பத்து வயத்திற்கு   உட்பட்டவர்கள் 13 வீதமானவர்களும், பெண் போட்டியாளர்கள் 24 வீதமானவர்களும் பங்கேற்றது சிறப்பு அம்சமாகும்இவ் உலகளாவிய தமிழர் இணையவழி  சதுரங்கப் போட்டியில் பங்குபற்றிய 17 நாடுகளும் பின்வருமாறு: 

Australia, Canada, France, Germany, India, Italy, Kenya, Netherlands, Norway, Oman, Singapore, Sri Lanka, Sweden, Switzerland, UAE, United Kingdom, United States. 

இந்த உலகத் தமிழர் அதிவேகச் சதுரங்கப்  போட்டியில் முதல்  7 இடங்களைப் தமதாக்கிக் கொண்ட வெற்றியாளர்களுக்கு மொத்தப் பரிசுத் தொகையாக   400 அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட இருக்கின்றது என்பதை இங்கே மகிழ்ச்சியுடன் தெரியத் தருகின்றோம். 

வெற்றி பெற்றவர்களின்  விபரம்

1st  Kirushanth Sivanandan      Switzerland                

2nd Charukgan Muhunthan                  UK                               

3rd  IM Arjun Kalyan                            India                           

4th Sabapathipillai Kopithan    Sri Lanka                    

5th  Rohit  Saravana Pragash    India                           

6th Mithun Kalaiyarasan                      India                           

7th Aarunya  Ravindran Ranjan           Sri Lanka             

 WTCFஆனது சமய, அரசியலற்ற, ஒரு தூய சதுரங்க வல்லமையை உலகத் தமிழர்கள் மத்தியில் ஊக்குவிப்பதற்காகவும்,  உலகளாவிய ரீதியில் நடாத்தப்படும் சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்கும் தரத்திற்கு நமது தமிழ் சந்ததியை உயர்த்துவதற்காகவும் ஆரம்பிக்கப்பட்டதாகும். நமது இந்த அமைப்பானது உலகின் பல நாடுகளிலும் உள்ள சதுரங்க ஆர்வலர்ளால் உருவாக்கப்ட்ட ஒரு அமைப்பாகும்.

உலகில் பரந்துபட்டு வாழும் தமிழ் உறவுகளை, சதுரங்க விளையாட்டின்  மூலம் ஒன்றிணைப்பதும் எமது நோக்கங்களில் ஒன்றாகும். 

40 வருடத்துக்கு மேலாக நோர்வே நாட்டி லும் இலங்கை வட, கிழக்கிலும் பல சமூக நலன்களில் ஈடுபட்டிருக்கும் நோர்வே தமிழ்ச் சங்கம், முதல்  முறையாக உலகத் தமிழர் சதுரங்க ஒன்றியத்துடன் இணைந்து, இப் போட்டியை நடத்தியது அனைவராலும் பாராட்டப்பட்டது.

Related posts