உலக இருதய நோய் தினத்தை முன்னிட்டு கல்முனையில் விழிப்புணர்வு ஊர்வலம்

உலக இருதய நோய் தினத்தை முன்னிட்டு இது தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலமொன்று கல்முனையில் திங்கட்கிழமை (30) இடம்பெற்றது .
 
கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனை மற்றும் ,தொற்றா நோய்பிரிவு என்பன இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இவ் விழிப்புணர்வு  ஊர்வல பேரணியானது
 
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல். அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது.
 
இப் விழிப்புணர்வு நடவடிக்கையின் போது சுகாதார பணிமனையின் வைத்தியர்கள் , ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
 
 இவ் விழிப்புணர்வு ஊர்வலமானது கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை முனன்றில் ஆரம்பித்தது பின்னர் பொலிஸ் வீதியினுடாகச் சென்று கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை   ஊடாக பொது சந்தை வரை   சென்று  மீண்டும் ஆரம்ப இடத்தை வந்தடைந்தது. இதன் போது  மக்களுக்கு  நோய் தொடர்பான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன்
குறிப்பாக  , புகைத்தல், மதுபானம் அருந்துதல் ,ஆரோக்கியமான உணவு இன்மை ,முறையான உடற்பயிற்சி இல்லாமல்  போன்ற காரணங்களால் இவ் நோய் தாக்கம்  ஏற்ப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts