ஊருக்கு புகும் காட்டு யானை கூட்டம் அச்சத்தில் நிந்தவூர் , சம்மாந்துறை கிராமவாசிகள்

(எஸ்.குமணன்)
அம்பாறை  மாவட்டத்தின் சம்மாந்துறை  நிந்தவூர் எல்லையை அண்டிய  நீரேந்துப் பகுதியை  நோக்கி   ஊடுருவிய காட்டு யானைகளின் நடமாட்டத்தினால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
 
 
ஊடுருவும் காட்டு யானைகள் அயலிலுள்ள காடுகளுக்குள் இருந்து குறித்த பகுதி  கிராமங்களுக்குள்   கடந்த  சனிக்கிழமை(21)   முதல்  தொடர்ச்சியாக கிரமங்களுக்குள் வந்து சேதம் விளைவித்து வந்ததாக மக்கள் தெரிவித்தனர்.
 
 இக் காட்டு யானைகள் ஊருக்குள் ஊடுருவுவதைத் தடுப்பதற்காக   ஊர்ப் பகுதியைச் சுற்றி  அமைக்கப்பட்டுள்ள சில   யானை  தடுப்பு மின்சார வேலிகள் செயலிழந்துள்ளதுடன்   ஊடுருவியுள்ள  காட்டு யானைகள் கூட்டம்   வீட்டு மதிலினை உடைத்து சேதம் விளைவித்ததோடு பயன்தரும் பயிர்களையும் மரங்களையும் துவம்சம் செய்து சென்றுள்ளன.
 
காட்டு யானைகள் ஏற்படுத்தும் சேதம் தொடர்பாக கிராம சேவையாளரிடமும்   பொலிஸாரிடமும் கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

Related posts