பல்கலைகழக கல்விசாரா ஊழியர்கள் தொடர் பணி பகிஷ்கரிப்பில்

(எஸ்.குமணன்)
 
அம்பாறை மாவட்டம்  தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (10) செவ்வாய்க்கிழமை காலை 10 : 30 மணியளவில் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
 
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 2500 ரூபாய் சம்பள உயர்வு ஏனைய  அரசாங்க ஊழியருக்கு வழங்கப்பட்ட போதும் கல்விசாரா ஊழியர்களுக்கு மறுக்கப்படுவதேன் கோசம் எழுப்பினர்.
 
தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத்தலைவர் மொகமட் நொபர் தெரிவிக்கையில்…
 
நாடாவியரீதியில் இடம்பெற்று வரும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பில் எமது தென்கிழக்கு பல்கலை கழகமும் இணைந்து இன்றுமுதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.
 
எமது கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செவிசாய்த்து தீர்த்த தரும் வரை எமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம் என்பதை தெரிவித்து கொள்கின்றோம்.
 
சம்பள அதிகரிப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஜூலை 30 ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை மேற்கொண்டிருந்தோம். சம்பந்தப்பட்ட தரப்பினர் எங்களுக்கு சாதகமான பதில் தராததினால் கடந்த ஓகஸ்ட் 28,29 ம் திகதிகளில் இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொண்டிருந்தோம்.  இவற்றை செவிமடுக்காத அரசாங்கம் கூடிய விரைவில் தீர்த்து தீரும்வரை போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்திருப்பதாக தெரிவித்தார்.

Related posts