பெரிய கல்லாறு விழுமியம் அமைப்பினரால் மாணவர்களுக்கு முகக் கவசம் வழங்கி வைப்பு

பெரிய கல்லாறு மத்திய கல்லூரியில் 1994 ஆம் கல்வியாண்டில் க.பொ.த சாதாரதரம் கல்வி கற்ற மாணவர்களின் ஒருங்கிணைப்புடன் உதயமான விழுமியம் அமைப்பினரால் பெரிய கல்லாறு கிராமத்திலுள்ள நான்கு ஆரம்பப் பிரிவு பாடசாலைகளில் கல்வி கற்கும் 600மாணவர்களுக்கும் 60 ஆசிரியர்ளுக்கும் கண்ணாடி பொருத்தப்பட்ட பெறுமதியான முகக்கவசங்கள் வழங்கும் நிகழ்வு பெரிய கல்லாறு விநாயகர் வித்தியாலயத்தில் இன்றுஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
 
நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலய ஆரம்பப் பிரிவு உதவிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.தயாளசீலன்  மற்றும் அமைப்பின் போசகர் எஸ்.பேரின்பராசா,பொதுச் சுகாதாரப் பரிசோதகர்,பாடசாலைகளின் அதிபர்கள்,அமைப்பின் பிரதி நிதிகள் பலரும் கலந்து கொண்டனர். 
 
இதன் போது அமைப்பின் பிரதி நிதிகளினால் அதிபர்களுக்கு முகக் கவசங்கள் அடங்கி பொதிகள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts