மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து முன்பள்ளி பாலர் பாடசாலைகளும் 29ம் திகதி ஆரம்பிக்கப்படும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து முன்பள்ளி பாலர் பாடசாலைகளும் எதிர்வரும் 29 திகதி ஆரம்பிக்கப்படும் என முன்பள்ளி பாலர் பாடசாலைகள் பணியகத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எஸ்.சசிகரன் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்ட அமையதியற்ற நிலையை கருதிற்கொண்டு செவ்வாய்க்கிழமை (23)ஊடகங்களுக்கு தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலையை கருத்திற்கொண்டும்,குழந்தைகளின் பாதுகாப்பு கருதியும் முன்பள்ளி பாலர் பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் திங்கட்கிழமை(29)ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நாட்டில் சுமுகமான நிலை ஏற்படாவிட்டால் அதுபற்றி பின்னர் அறிவிக்கப்படும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் நகர்புறத்தில் உள்ள சீயோன் தேவாலயம் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள குண்டுத்தாக்குதல் காரணமாக குழந்தைகள்,பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ளார்கள்.இதனால் மட்டக்களப்பு மாவட்டம் உட்பட நாடுமுழுவதும் துக்கமான,சோகமயமான அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.இதனால் நாட்டிலே இன்னும் சுமுகமான நிலை ஏற்படவில்லை.

இதற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளும் எதிர்வரும் 28திகதி வரையும் மூடப்பட்டு,பாலர் பாடசாலைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் 29திகதி ஆரம்பிக்கப்படும் என முன்பள்ளி பாலர் பாடசாலைகள் பணியகத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts