யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக இந்த அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும்

நேற்றைய தினம் 03.05.2019 திகதி  யாழ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட விசேட தேடுதலின் போது மாணவர் விடுதியிலிருந்து இன அழிப்பிற்கான புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டதாக்கூறு மாணவ தலைவர் மற்றும் செயலாளர் இருவரும் இராணுவத்தினரினால் கைது செய்யப்பட்ட கோப்பாய் பொலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதன் பின்னர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களது விடுதலை குறித்து  04 ஆம் திகதி  அம்பாறை வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில் 01 வாஹிஸ்டர் வீதியிலமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவிக்கையில்
அண்மையில் 21.04.2019 ஆம் திகதி நடைபெற்ற வெடிப்புச்சம்பவத்தின் போது உயிர்நீத்த உறவுகள் அனைவருக்கும் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம் அந்த வகையில் இத்தாக்குதல் நடாத்தப்பட்டதன் பின்னர் இலங்கை இராணுவத்தினரினால் சோதனை நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது இதனை நாம் வரவேற்கின்றோம் இவ்வாறு இருப்பின் தான் குற்றச்செயல்களை குறைக்கமுடியும் அத்துடன் நடைபெறும் அசம்பாவிதங்களை கண்டுபிடித்து தடுக்கமுடியும்.
யுத்தம் முடிந்து 11 வருடங்கள் ஆகின்றன ஆனால் இன்றுவரை அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை அவர்கள் எந்த நிபந்தனைகளுமின்றி சிறையில் வாடுகின்றனர் அவ்வாறுதான் இன்றுவரை வவுணதீவு பொலீஸார் கொலையுடன் தொடர்புடையதாககூறி அஜந்தன் என்பவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்படாமல் உள்ளார் அவர்களது குடும்பத்தாரின் நிலை மிக கவலைக்குரியதாக அமைகின்றது அவரது மனைவியின் மனநிலை வேதனையாகவே உள்ளது ஐந்து குழந்தைகளுடன் அவர் சொல்லோனா துயரத்தில் வாழ்ந்து வருகின்றனர் அவரது பிள்ளைகள் எப்போது அப்பா வருவார் என அவரது மனைவியிடம் கேட்டவண்ணமாகவுள்ளனர்.
ஆகையினால் இந்த அரசாங்கம் அவரை விடுவிக்க வேண்டும் அஜந்தன் என்பவர் செய்ததாக கூறப்படுகின்ற கொலையினை 21 ஆம் திகதி குண்டுத்தாக்குதல் நடாத்தியவர்கள் நாம் செய்ததாக ஏற்றுக்கொண்டுள்ளனர்என்பதனால் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
பல்கலைக்கழக மாணவர்களின் கைதானது யுத்தகாலங்களில் நடைபெற்றது போல் இப்போதும் நடைபெறுகின்றது அன்றைய சூழ்நிலையில் மாணவர்களை கைது செய்ததன் மூலமாக அவர்களது கல்வி நிலைகள் பாதிக்கப்பட்டதுடன் குடும்பமும் வறுமை நிலையில் இருந்தனர் அவ்வாரான ஒரு நிலைமை தற்போது இடம்பெற்றுள்ளது ஆகையினால் நேற்று கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என இவ்விடத்தில் கூறிக்கொள்ளவிரும்புகின்றேன் என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts