விவசாய ஊக்குவிப்பு வாரத்தில் மாணவர்க்கு கூட்டெரு செய்முறைப்பயிற்சி!

விவசாய திணைக்களத்தினால் இவ்வாரத்தினை ” விவசாய ஊக்குவிப்பு வாரமாக” பிரகடனப்படுத்தியதற்கமைய  நிந்தவூர் விவசாய விரிவாக்கல் நிலையத்தின் ஏற்பாட்டில் “விவசாய ஊக்குவிப்பு வாரம்” பல்வேறு வேலைத்திட்டங்களுடன் நடாத்தப்பட்டுவந்தது.
 
அதன் ஓரங்கமாக நேற்று  பாடசாலை மாணவர்க்கு சேதனப்பசளைகளின் முக்கியத்துவம் மற்றும் கூட்டெரு தயாரிப்பது தொடர்பான செய்முறைப்பயிற்சி வகுப்பொன்றும்   நடாத்தப்பட்டது.
 
நிந்தவூர் விவசாயப்போதனாசிரியர் திருமதி சஜிகலா ரகுநந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவிவிவசாயப்பணிப்பாளர் திருமதி அழகுமலர் ரவீந்திரன் பிரதமஅதிதியாகக்கலந்துகொண்டு சிறப்பித்தார்.
 
 
“சுற்றாடல் நேயன் அமைப்பு” இணைந்து அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க நிந்தவூர் பாடசாலைகளின் சுற்றாடல் முன்னோடி மாணவர்களின் செயற்திட்டங்களுக்கு உதவும் நோக்கில் முதற்கட்டமாக நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலை மற்றும் நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவர்களுக்கு கூட்டெரு உற்பத்தி செயல்முறை பயிற்சி பட்டறை நடாத்தப்பட்டது.
 
இதில்  கிழக்கு மாகாண விவசாய உதவி பணிப்பாளர் திருமதி.அழகுமலர் ரவீந்திரன் விவசாய போதனாசிரியர் திருமதி.சஜிகலா தொழில்நுட்ப உதவியாளர் எம்.நஜாத்  சுற்றாடல் நேயன் அமைப்பின் தலைவர் எம்..சாஹித் செயலாளர் து.அப்சால் அஹம்மட் ஆகியோரின் பங்களிப்புடன் நிந்தவூர் வன்னியர் வீதியில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
 
 இதில் ஆசிரியர் சகிதம் மாணவர்கள் அனைவரும் கலந்து பயன்பெற்றனர்.

Related posts