சாம்சங் ஏ6 மற்றும் கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்

சாம்சங் நிறுவனம் விரைவில் கேலக்ஸி ஏ6 மற்றும் கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்கள் மற்றும் விலை பற்றிய விவரங்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ6 மாடல் 5.6 இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்பிளேவைக் கொண்டு வெளிவரும். இந்த டிஸ்பிளே முழு ஹெச்டி மற்றும் 2280×1080 பிக்சல் திர்மானம் கொண்டவையாக இருக்கும்.

மேலும் இந்த மாடலின் பிராஸசர் எக்சினோஸ் 7870 என்றும், பின்பு 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது அதேபோல் கேலக்ஸி ஏ6 பிளஸ் மாடலை பார்க்கும்போது இதன் டிஸ்ப்ளே 6 இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்பிளே என்றும், இந்த மாடலிலும் முழு ஹெச்டி மற்றும் 2280×1080 பிக்சல் திர்மானம் கொண்டவையாக இருக்கும் என்றும் தெரிகிறது.

மேலும் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர் கொண்ட இந்த போனில் ஸ்னாப்டிராகன் 450 பிராஸசராக இருக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இடம்பெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 16எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 24மெகாபிக்சல் ஆதரவுடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ6 சாதனத்தின் பின்புறம் 16மெகாபிக்சல் கொண்ட ஒற்றை கேமரா மட்டுமே பொறுத்தப்பட்டுள்ளது,மேலும் சிறந்த பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

சாம்சங் கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டள்ளது எனக் கூறப்படுகிறது. ஆன்லைனில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போன் மாடல் ரூ.24,100-விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது, அதேபோல் கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.28,900-வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts