அகில இலங்கை மக்கள் செயல் கழகத்தின் ஏற்பாட்டில் புற்றுநோயாளருக்கான உலர்உணவு பொதிகள் வழங்கி வைப்பு


அகில இலங்கை மக்கள் செயல் கழகத்தின் ஏற்பாட்டில்  புற்றுநோயாளருக்கான உலர்உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  நேற்றைய தினம் 01  நடைபெற்றது.
அந்தவகையில் அகில இலங்கை மக்கள் செயல் கழகத்தின்  முதலாவது சுகாதார பணியில் ஒருகட்டமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் மற்றும் சிறுவர்நோய் பிரிவு காசநோய் பிரிவு உள்ளிட்ட பிரிவில் தங்கி இருக்கும் நோயாளருக்கு 500/- பெறுமதியான உலர் உணவு பொருட்கள் 100 பொதிகள் நோயாளருக்கு வழங்கி இவ் ஆண்டின் முதல் நாளை சமூகப்பணியோடு ஆரம்பித்துள்ளது.
இவ் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் செயல் கழகத்தின் செயலாளர் லோ.நிரோஜன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது  கழகத்தின் பொருளாளர்  க.சுதர்சன்  கழக அங்கத்தவர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது  கருத்து தெரிவித்த செயலாளர் எதிர்வரும் காலங்களில் மட்டக்களப்பு பூராகவும் மக்களுக்கான செயற்பாடுகளை ஆரம்பிப்பதோடு கிழக்கு மாகாணம் பூராகவும் சேவையினை விஸ்தரித்து மக்களுக்கான தேவையினை பூர்த்தி செய்து கொடுப்பதே கொள்கையாக கொண்டு இயங்க இருக்கிறது என்பதை தெரிவித்தார்.
அத்தோடு பொருளாளர்  கருத்து தெரிவிக்கையில் எதிர்வரும் காலங்களில் மாணவருக்கான கற்கை உபகரணங்கள் சில பகிர்ந்தளிக்க உள்ளதாக தெரிவித்ததோடு அங்கத்தவர்கள் தங்கள் கழகத்தில் இணைந்து தங்கள் கிராமத்திற்கான உதவியை பெற்று அபிவிருத்தியை செய்யுமாறு கேட்டு கொண்டார் இதன் போது புற்றுநோய் வைத்திய நிபுணர் மற்றும் தாதியர்களும் கலந்து சிறப்பித்தனர் நோயாளருக்கு வீவா மற்றும் ஒரேச் பிஸ்கட் சமபோஷா பக்கட்கள் என பல உலர்உணவு பொருட்கள் அடங்கிய பக்கட்டுக்கள் வழங்கப்பட்டது
உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற புற்றுநோயாளருக்கான உலர்உணவு பொதிகளை வழங்கும் நிகழ்வானது அதையும் தாண்டி சிறுவர் பிரிவிற்கும் என விரிவடைந்தது. இதற்கு அனுசரணை வழங்கிய வாழைச்சேனை சிங்கர் காட்சியறை முகாமையாளர் மற்றும் உறுப்பினர்கள் குமரன் ஸ்ரோர்ஸ் கூழாவடி கல்முனை இளைஞர்கள் மட்டக்களப்பு  இளைஞர்கள் அனைவருக்கும் நன்றிகளை மனதார தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts