அதி கஸ்டப் பிரதேச பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு 1000 ஆசிரியர்கள் மிகவிரைவில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளது- சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதி கஸ்டப் பிரதேசங்களில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு மிகவிரைவில் தீர்வு காணப்படும் என பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (24.12.2020) விவசாய சங்கங்களின் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடியபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவிக்கையில்…
எதிர்வரும் காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அதிகஸ்டப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஏற்ப சுமார் 1000 பட்டதாரிகளுக்கு முறையான பயிற்சிகளை வழங்கி அவர்களை வலுப்படுத்தி பயிற்சிப் பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்வதற்கான வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.