அம்பாறை மாவட்டத்தில் மேலும் 24பாடசாலைகள் தேசியபாடசாலைகளாகின்றன!

அம்பாறை மாவட்டத்தில் மேலும் 24 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவிருக்கின்றன.
 
முதலாம் கட்டத்தில்ஆறு பாடசாலைகளும் இரண்டாம் கட்டத்தில் 18பாடசாலைகளும் தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இருந்தபோதிலும் இரண்டுகட்டங்களிலுள்ள பாடசாலைகள் ஏககாலத்திலேயே அமுலுக்குவரும்வகையில் செயற்பாடுகள் நடந்தேறிவருகின்றன.
முதலாம் கட்டத்தில் கல்முனை வலயத்தில் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியும்,காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரியும் ,சம்மாந்துறை வலயத்தில் நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயமும் ,லாகுகலை வலயத்தில் பாணமை மகாவித்தியாலயமும், தமனவலயத்தில் மடவளாந்த மகாவித்தியாலயமும் ,மகாஓய வலயத்தில் கெப்பிட்டிபொல மகா வித்தியாலயமும் தெரிவாகியுள்ளன.
 
இரண்டாம் கட்டத்தில் அக்கரைப்பற்றுவலயத்தில் ஒலுவில் அல்ஹம்றா மகாவித்தியாலயமும்,அக்கரைப்பற்று ஆயிஷா பாலிகா முஸ்லிம் மகா வித்தியாலயமும் ,அஸ்ஷிறாஜ் மகளிர் வித்தியாலயமும்  ,பொத்துவில் அல்இர்பான் மகளரி வித்தியாலயமும், கல்முனை வலயத்தில் மருதமுனை ஷம்ஸ் மகாவித்தியாலயமும்,உவெஸ்லி உயர்தர பாடசாலையும் ,கல்முனை மகுமுத் மகளிர் கல்லூரியும், அல்பகுரியா மகாவித்தியாலயமும், நிந்தவூர் அல்மஸ்ஹர் மகாவித்தியாலயமும் ,சம்மாந்துறை வலயத்திலுள்ள தாருஸ்ஸலாம் மகாவித்தியாலயமும் ,அல்அர்ஷத் மகாவித்தியாலயமும், நாவிதன்வெளி சாளம்பைக்கேணி அஸ்ஷிறாஜ் மகாவித்தியாலயமும்  ஏனைய ஆறு சிங்கள பாடசாலைகளும் தெரிவாகியுள்ளன.
 
மத்திய கல்வியமைச்சின் உயரதிகாரிகள் குழுவினர்  திருகோணமலையிலுள்ள  கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தில் மாகாணகல்விப்பணிப்பாளர் வலயக்கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் மாவட்டஅபிவிருத்திக்குழுத்தலைவர்கள் அடங்கிய கூட்டத்தில் மேற்படி பாடசாலைகள் அங்கீகரிக்கப்பட்டன.
இத்தெரிவில் திருக்கோவில் போன்ற  ஒருசில வலயங்கள் விடுபட்டிருக்கின்றன.மட்டுமல்லாமல் மேலும் சில பாடசாலைகள் சேர்க்கப்படவேண்டும் என அபிவிருத்திக்குழுத்தலைவர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

Related posts