கல்வி வலயத்திற்குட்பட்ட மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்ற முப்பெரும் நிகழ்வு

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்ற முப்பெரும் நிகழ்வு பாடசாலை அதிபர் கே. பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்றது.

பாடசாலையின்  அதிபராக கே. பாஸ்கரன் பதிவியேற்றுக் கொண்டதன் முதன் நிகழ்வாக  மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டுதல், இசையமைக்கப்பட்ட பாடசாலை கீதம் இறுவட்டு வெளியீடு பாடசாலை சுகாதாரக் கழகத்தை ஸ்தாபித்தல் ஆகிய முப்பெரும் நிகழ்வுகள் இதன்போது இடம்பெற்றன.

இங்கு இடம் பெற்ற நிகழ்வின்போது, வருகைதந்த அதிதிகளால் மாணவர்களுக்கு சின்னம் சட்டப்பட்டதுடன், இசையமைத்து பாடிய பாடசாலை கீதத்தின் இறுவட்டும் வெளியிடப்பட்டது.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடை பெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் உடற் கல்விப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் வி. லவக்குமார், ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.டபிள்யூ.கே. ஜயந்த, கோட்டக்கல்விப் பணிப்பாளர் ரீ. ராஜ்மோகன் பாடசாலை மேம்பாட்டுத் திட்ட இணைப்பாளர் விக்னேஸ்வரி மகேஸ்வரன் உள்ளிட்டோரும் அயற்புற பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் பாடசாiலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் பழைய மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தமிழ் சமூகத்திற்கு உள்ள பெரிய மூலதனம் கல்வி மட்டும்தான் அதனை தமிழ் சமூகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என இந் நிகழ்வில் கலந்துகொண்ட ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.டபிள்யூ.கே. ஜயந்த  தெரிவித்தார்.

Related posts