அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் தொடர்பான விழிப்புணர்வூட்டல் கருத்தரங்கு இன்று 14 ஆம் திகதி கல்முனை மாலிகைக்காடு பேர்ள் றிசப்சன் மண்டபத்தில் உணர்ச்சி நுண்ணறிவு மற்றும் வாழ்க்கைத் திறன் பயிற்சி நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரசாத் ஜெயசிங்க தலைமையில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கின் போது வளவாளராக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சுற்றுலா முகாமைத்துவ பீட பேராசிரியர் எம்.எஸ்.எம் அஸ்லம் கலந்து கொண்டு சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் உள்ள பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் அதன் வளர்ச்சிக்காக ஊடகவியலாளர்களின் பங்களிப்புக்கள் இலங்கையில் உள்ள சுற்றிலா பிரதேசங்களின் சாதக பாதக கருத்துக்கள் அதன் முன்னேற்றங்கள் சம்பந்தமாக ஊடகவியலாளர்கள் மத்தியில் விழிப்பூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் இச்செயற்திட்டமானது அவுஸ்திரேலியா எயீட் நிறுவனம் இலங்கை திறண் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்ததுடன் அதன் போது அம்பாறை மாவட்டத்தில் உள்ள இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் உள்ள ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.