ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கல்முனையை பாதுகாக்கும் போராட்ட வீரனாக உவெஸ்லி – கோடீஸ்வரன் புகழாரம்

 

(எஸ்.குமணன்)

அம்பாறை மாவட்டம் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் 136 ஆம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு கல்லூரி தினம் இன்று புதன்கிழமை (11) காலை 

9:30  மணி அளவில் பாடசாலை கேட்போர் கூடத்தில் கல்லூரி முதல்வர் வி. பிரபாகரன் தலைமையில் கல்லூரி தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
 
திகாமடுல்ல மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். நிகழ்வுகள் பாடசாலையின் பழைய மாணவர்களின் சுடரேற்றலுடன் 
மாணவிகளின் பரதநாட்டிய நடனங்களுடன் இனிதே ஆரம்பிக்கப்பட்டது.
 
அகில இலங்கை தமிழ் மொழி தின போட்டியில் தங்கம் , மகாண மட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கான கௌரவிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.இதனை தொடர்ந்து 136 ம் ஆண்டு உவெஸ்லி உயர்தர பாடசாலையின் வரலாற்றை சுமந்த நூல் அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
 
 
இங்கு உரையாற்றிய கவீந்திரன் கோடீஸ்வரன் … 
 
கல்முனை பிரதேசத்திலே  ஒரு எல்லை காவலனாக உவெஸ்லி உயர்தர பாடசாலை மிளிர்வதை கண்ணூடாக காணமுடிகிறது. ஏனையவர்களின் நில ஆக்கிரமிப்பு , அச்சுறுத்தல், பாதுகாக்கும் காவல் தெய்வமாகவும் ஒரு போராட்ட வீரனாகவும் இருப்பதை காணமுடிகிறது என தெரிவித்தார்.
 
இந்த நிகழ்விற்கு வண .எஸ்.எஸ். ரெறன்ஸ் வடக்கு கிழக்கு மாகாண மெதடிஸ்த திருச்சபையின் தலைவர், எஸ்.டி,வினோத் மெதடிஸ் தேவாலயம் கல்முனை,  சர்வமத தலைவர்கள், கல்வி அமைச்சின் கிழக்கு மாகாண  பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் எஸ். நவனீீதன் , அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஸன்,    கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள்   மாணவர்கள், பெற்றோர்கள்,பழய மாணவர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள்,என பலரும்  கலந்துகொண்டனர்.

Related posts