அசிஸ்ற் ஆர்ஆர் அமைப்பின் கொரோனா உலருணவுநிவாரணப்பொதிகள்.

புனர்வாழ்வும் புதுவாழ்வும் (அசிஸ்ற் ஆர்ஆர்- Assist RR) அமைப்பின் கொரோனா  உலர் உணவு நிவாரணப்பொதிகள் வழங்கும் பணி நடைபெற்றுவருகிறது.
 
கொரோனா அச்சத்தால் நாளாந்த தொழில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர்உணவு நிவாரணப்பொதி வழங்கும் திட்டத்தின்கீழ் வடக்கு கிழக்குப்பிரதேசங்களில் மிகவும் நலிவுற்ற இடங்களில் வழங்கப்பட்டுவருகின்றன.
 
குறிப்பாக நெடுங்கேணி தங்கவேலாயுதபுரம் வினாயகபுரம் திராய்க்கேணி வளத்தாப்பிட்டி கோபாலபுரம் 
போன்ற பின்தங்கிய இடங்களுக்கு இப்பொதிகள் வழங்கப்பட்டன.
 
அவசர உதவியாக முதற்கட்டமாக ஒவ்வொன்றும் 100ருபா பெறுமதியான 500 உலருணவுப்பொதிகள் அம்பாறை மாவட்டத்தில் வழங்கிவைக்கப்பட்டன.
 
திருக்கோவில் பிரதேசசெயலாளர் கே.கஜேந்திரனின் வேண்டுகோளின்பெயரில்  200 பொதிகளும் சமுகசேவையாளர் வி.ரி.சகாதேவராஜாவின் வேண்டுகோளில் 200 பொதிகளும்  நாவிதன்வெளிப்பிரதேசத்திற்கு பிரதேசசெயலாளர் எஸ்.ரங்கராஜனிற்கு 100 பொதிகளும் வழங்கப்பட்டன என அமைப்பின் இலங்கைக்கான தலைவர் எந்திரி ஹென்றிஅமல்ராஜ் தெரிவித்தார்.
 
இலங்கையில் வடக்கில் முதற்கட்டமாக வடக்கில் நெடுங்கேணியில் 2000பொதிகள் கிழக்கில் 500பொதிகள் வழங்கப்பட்டதாக அமைப்பின் பொருளாளர் எந்திரி நல்லையா சிறிஸ்கந்தராஜா தெரிவித்தார். இரண்டாம் கட்டமாக மேலும் சில பின்தங்கிய பகுதிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
அசிஸ்ற் ஆர்ஆர்; அமைப்பின் சர்வதேச தலைவர் கலாநிதி வேலாயுதம் சர்வேஸ்வரன் இலங்கைக்கான தலைவர் எந்திரி ஹென்றி அமல்ராஜ் ஆகியோரிடம் சமுகசேவையாளர் வி.ரி.சகாதேவராஜா விடுத்த வேண்டுகோளின் பேரில் 100குடும்பங்களுக்கான உலருணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.
 
சமகால கொரோனா நெருக்கடியினால் மிகவும் பாதிக்கப்பட்ட நெடுங்கேணிமக்களுக்கு ஃஅடஅசிஸ்ற் ஆர்ஆர் அமைப்பு 2000
அன்றாடங்காய்ச்சி குடும்பங்களுக்கு அசிஸ்ற் ஆர்ஆர் அமைப்பின் சர்வதேச தலைவர் கலாநிதி வேலாயுதம் சர்வேஸ்வரன்அந்நிவாரணப்பொதியை நேரடியாகவே வழங்கிவைத்தமை குறிப்பிடத்தகக்து.

Related posts