ஆசிரியர்களுக்கு ஒரு அறிவிப்பை கல்வி அமைச்சு 16.01.2023 வெளியிட்டுள்ளது.
இதன்படி ஆசிரியர் இடமாறுதல் செயல்முறைக்காக தகவல் அமைப்பின் துல்லியத்தை உறுதி செய்தல்.
கல்வி அமைச்சு தேசிய கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் (NEMIS-THRM) கீழ் ஆசிரியர்களின் மனித வள மேலாண்மை அமைப்பில்
ஆசிரியர்களின் தனிப்பட்ட மற்றும் சேவைத் தரவுகளின் உள்ளடக்கம் எதிர்கால ஆன்லைன்(online) ஆசிரியர் இடமாற்றச் செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் இடமாறுதல் பணியை விரைவாகவும், முறையாகவும் மேற்கொள்ள, தகவல்களை தினமும் புதுப்பிக்க வேண்டும்.
எனவே, அரச பாடசாலைகளில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் இதைப் பற்றி அறிந்து கொண்டு ஆசிரியர்களின் மனிதவள மேலாண்மை தகவல் அமைப்பை https://nemis.moe.gov.lk தகவல் வலையமைப்பின் மூலம் அணுகி அவர்களின் தகவல்களின் துல்லியத்தை உறுதிப்படுத்த வேண்டும். திருத்தங்கள் இருப்பின் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்க வேண்டும். என கேட்டுக்கொண்டுள்ளது.