கல்முனை நகரில் ஆடை விற்பனை நிலையம் ஒன்று தீப்பிடித்து இருந்துள்ளது. இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு ஒன்பது மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தீப்பிடித்து சில நிமிடங்களில் கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீ மேலும் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் ஏனைய வர்த்தக நிலையங்களுக்கு தீ பரவாமல் பாரிய இழப்பு தவிர்க்கப்பட்டிருக்கிறது. இதன்போது கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீபும் ஸ்தலத்துக்கு விரைந்திருந்தார்.
இத்தீவிபத்து காரணமாக குறித்த ஆடை விற்பனை நிலையம் பகுதியளவிலேயே எரிந்துள்ள போதிலும் தீச்சூட்டினால் அங்கிருந்த ஆடைகள் யாவும் நாசமடைந்துள்ளன.
தீவிபத்துக்கான காரணம் மின் ஒழுக்காக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதேவேளை, கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.