மனிதன் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு மாணவரிடையே நடாத்தப்பட்ட இக்கட்டுரைப்போட்டி முன்மாதிரியானதாகும். அதுவும் ஒரு வைத்தியசாலை நடாத்தியது சிறப்பானது.
இவ்வாறு கல்முனை ஆதாரவைத்தியசாலையில் நடைபெற்ற கட்டுரைப்போட்டிக்கான பரிசளிப்புவிழாவில் பிரதமஅதிதியாக கலந்துகொண்ட வடக்கு பிரதேசசெயலாளர் ஏ.ஜே.அதிசயராஜ் புகழாரம் சூட்டினார்.
தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலை சுகாதார விழிப்புணர்வு கட்டுரைப் போட்டியை அண்மையில் நடாத்தியது. அப்போட்டியின் வெற்றியாளர்களுக்கான பரிசுவழங்கும் விழா வைத்தியசாலையின் வைத்தியஅத்தியட்சகர் வைத்தியகலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரன் தலைமையில் மாலை நடைபெற்றது.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:
தற்காலத்தில் எம்போன்ற முதல்நிலை முகாமையாளர்களுக்கு எமது அலுவலக வேலைகளையே முழுமையாக செய்யமுடியாத நிலை. ஆனால் அத்தனை வேலைப்பழுக்களுக்கு மத்தியில் ஒரு வைத்தியஅத்தியட்சகராகவிருந்து கட்டுரைப்போட்டியை நடாத்தியிருப்பது புதுமையாகவும் புதினமாகவுமிருக்கிறது.
சுகாதாரத்துறையிலிருந்து கல்வித்துறை மாணவர்களிடையே சுகாதாரம்தொடர்பான அறிவூட்டலை மேற்கொள்வதன்மூலம் ஆரோக்கியமான சமுகத்தை கட்டியெழுப்புதல் இதன்நோக்கமாக இருத்தல்கூடும். அதாவது வைத்தியசாலைக்குவரும் நுகரிகளைக்குறைப்பது மறைமுகநோக்கமாக இருக்கலாம்.
உண்மையில் எம்போன்ற உயர்நிலை முகாமையாளர்களுக்கு வைத்தியஅத்தியட்சகர் முரளீஸ்வரனின் இம்முயற்சி நல்ல முன்னுதாரணமாகும். அவரை வாழ்த்துகிறேன்.
அதுபோல இங்கு கிழக்கின் பலபாகங்களிலுமிருந்தும் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். என்றார்.
பரிசளிப்புவிழாவில் அதிதிகளாக பற்றிமா அதிபர் வண.சகோ.செபமாலை சந்தியாகு உவெஸ்லி அதிபர் த.கலையரசன் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஓய்வுநிலை அதிபர்களான பி.பெஞ்சமின் கே.பாக்கியராஜா வைத்தியநிபுணர் டாக்டர் ஜி.ரொசான் டாக்டர் சு.டிலக்குமார் கணக்காளர் எம்.கேந்திரமூர்த்தி வைத்தியர் ந.ரமேஸ் உள்ளிட்டோர் கலந் துசிறப்பித்தனர்.
இறுதியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு அதிதிகளால் பதக்கம் அணிவிக்கப்பட்டு நினைவுச்சின்னம் வழங்கப்பட்டதுடன் பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.
தாதியஉத்தியோகத்தர்களானஅ.அழகரெ
நன்றியுரையை தாதியபரிபாலகர் அ.சசிதரன் வழங்கினார்.