மட்டக்களப்பில் பாரம்பரிய உணவுப்பொருட்கள் கண்காட்சியும்,விற்பனையும் திறந்து வைக்கப்பட்டது

மட்டக்களப்பில் பாரம்பரிய உணவுப்பொருட்கள் கண்காட்சியும்,விற்பனையும் திறந்து வைக்கப்பட்டது.
 

மட்டக்களப்பு மாவட்ட செயலகமும்,மாவட்ட கலாச்சார திணைக்களம் இணைந்து பாரம்பரிய உணவுப்பொருட்கள் கண்காட்சி திறப்புவிழாவும்,விற்பனை கண்காட்சியும் இன்று புதன்கிழமை(23) காலை 10.30 மணியளவில் உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இக்கண்காட்சியை மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார்.இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்ஷினி ஸ்ரீகாந்,மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் க.ஜெகதீசன்,மாவட்ட விவசாய பணிப்பாளர் வை.பீ.இக்பால்,மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி. அ.பாக்கியராசா,மாவட்ட சிறுகைத்தொழில் உத்தியோகஸ்தர்கள்,விற்பனையாளர்கள் கலந்துகொண்டார்கள்.

இதன்போது இன்றைய சூழ்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அருகிச் செல்லும் சுமார் 60 உணவுப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

Related posts