அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட இசங்கனிச்சீமை இரண்டில் இன்று ஜனாதிபதி அவர்களின் வேலைத்திட்டத்தின் கீழ் கொங்ரீட் புதிய பாதை அமைக்கப்பட்டது.
இசங்கனிச்சீமை கிராமம் உருவாக்கத்திற்கு காரணமாக இருந்தவர்களில் திக்கி மரைக்காரும் ஒருவர் என்ற அடிப்படையில் அவருடைய நாமத்தில் “திக்கி மரைக்கார் பாதை” என்று பெயரிடப்பட்டு அந்தப் பாதை இன்று கொங்ரீட் பாதையாக மாற்றம் பெற்றுள்ளது என அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ரீ.எம். ஐய்யுப் தெரிவித்தார்.
மேலும், இந்த கிராமத்தின் பாடசாலைக்குரிய நிலத்தை வழங்கி இக்கிராமத்தை உயிரோட்டமாக ஆக்கியவர்களின் இவரும் ஒருவர் எனவே எமது மண்ணில் கௌரவம் அளிக்கக்கூடிய மரணித்தவர்களின் இப்பட்டியலில் இவரும் முதன்மை பெற்றவராக என்றும் திகழ்வார் அதனாலையே அவரை கௌரவப்படுத்தி இவ்வீதிக்கு அவரின் பெயரை சூட்டியுள்ளோம் என்றார்.