இடர்படும் மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கு சிறந்த வழிகாட்டல்களுடன் ஆசிரியர்கள் கற்பித்தலை மேற்கொள்ள வேண்டும்

பாடசாலைகளில் எழுத,வாசிக்க இடர்படும் மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கு சிறந்த வழிகாட்டல்களுடன் ஆசிரியர்கள் கற்பித்தலை மேற்கொள்ள வேண்டும் என பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்.

பட்டிருப்பு கல்வி் வலயத்தில்  பட்டதாரிபயிலுனர்களாக இணைக்கப்பட்டவர்களுக்கு கற்பித்தல் பயிற்சி செயலமர்வு வெள்ளிக்கிழமை(28)வலயக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் தலமைதாங்கி உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:-இன்றைய தமிழ் சமூகத்தின் நிறைவானதேடல் கல்வியாக இருக்க வேண்டும்.இன்றைய இளம் சமூகத்தினர் கல்வியை தேடிப் படிப்பதில் கூடிய கவனம் செலுத்தவேண்டும்.எமது தமிழ்சமூகம் பல்வேறு சவால்களுடன் கல்வியைத் தொடர்கின்றார்கள்.கல்வியை எமது இளம் சமூகத்திற்கு  சிறப்பானமுறையில் ஆசிரியர்கள் ஊட்டவேண்டும்.

பாடசாலை வகுப்பறையில் எழுத,வாசிக்க இடர்படும் மாணவர்களை இனங்கண்டு மாணவர்களின் இடர்பாடுகளை ஆசிரியர்கள் தங்குதடையின்றி நீக்க வேண்டும்.பட்டிருப்பு கல்வி வலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களை ஆசிரியர்கள் அனைவரும் தூரநோக்கு சிந்தனையுடன் செயற்பட்டு அவர்களுக்குரிய சிறப்பான கற்பித்தல்பணியை வழங்கி எமது சமூகம் எதிர்பார்க்கும் ஆளுமையான கல்விமான்களை அவர்களின் கரங்களில் கொடுக்கவேண்டும்.

கடந்த யுத்தத்தினால் பல்வேறு அழிவுகளையும்,இழப்புக்களையும் எதிர்நோக்கி சலிப்படைந்த எமது தமிழ்சமூகம் அதிலிருந்து மீட்சிபெற்று கல்வியை தொடர்ச்சியாக கற்றுக்கொள்ள வேண்டும்.தமிழர்களின் ஒரேயொரு பலம் கல்விதான்.கல்வியால்தான் நாம் இழக்கப்பட்டகல்வி,பொருளாதாரம்,இழப்புக்களை சாணாக்கியமாக எம்வசமாக்கிக் கொள்ளாலாம்.

கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களின் வழிகாட்டல்களுடன் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள மாணவர்களுக்கு வினைத்திறனுடன் கல்வியை ஊட்டி கல்விவளர்ச்சியை அதிகரிப்போம்.இவ்வாறு அதிகரிப்பதற்கு வகுப்பறையில் சிறப்பான கற்பித்தலை வழங்கியும்,எழுத வாசிக்க தெரியாத மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கு நல்ல கற்பித்தலை வழங்கியும்,இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் ஊக்குவித்தும் நாட்டுக்கு நற்பிரஜையாக்குவதில் ஆசிரியர்கள் இணைந்திருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Related posts