இந்தநாட்டிலே எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வுத்திட்டத்தை தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் முன்னெடுத்து வருகின்றார்.அத்தீர்வுத்திட்டத்
துறைநீலாவணை சுப்பர் கிங்ஸ் விளையாட்டுக் கழத்தின் 16ஆவது ஆண்டுதினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட விளையட்டுப்போட்டியிலே பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வு துறைநீலாவணை “சுப்பர் கிங்ஸ்” விளையாயாட்டுக் கழகத்தின் தலைவர் சுப்பிரமணியம்-மனோராஜ் தலைமையில் (6.5.2018) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்றது.இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினார் கே.சரவணமுத்து,அதிபர் கு.மனோகரன்,வர்த்தகர் கே.சங்கீத் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
அவர் தொடர்ந்து பேசுகையில்:-
இன்று வடகிழக்கில் கடந்த உள்ளுராட்சி தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பல பின்னடைவுகளை சந்தித்துள்ளது.ஆனால் அந்த பின்னடைவுகள் தமிழ்தேசியக்கூட்டமைப்புக்குரிய பின்னடைவுவல்ல.அது வடகிழக்கில் உள்ள ஒவ்வொரு தமிழர்களுக்கும் ஏற்பட்ட பின்னடைவுகள்தான் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.இந்த பின்னடைவுகள் சிங்கள பேரினவாதக்கட்சிகளால் ஏற்படுத்தப்பட்டு தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆளுவதற்கு போட்ட சதித்திட்டமாகும்.தமிழ் இனத்தை அடக்கி வாழலாம் என்பது பகற்கனவாகும். இந்த முன்னெடுப்புக்கு தமிழர்கள் ஒருபோதும் துணையிருக்க கூடாது.அந்த செயற்பாட்டை தடுத்து நிறுத்தவேண்டுமென்றால் தமிழ்கட்சிகள், தமிழ் அமைப்புக்கள் ஒன்றுசேர வேண்டும்.ஒன்று சேர்ந்து தமிழ்தேசியக்கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டுமென்ற ஒருகாலகட்டத்தில் இருக்கின்றோம்.எனவே ஒவ்வொரு தமிழர்களும் செயற்படுத்த வேண்டும்.அப்போதுதான் தமிழர்களுக்கான உரிமைக்குரல் தேசியத்திலும்,சர்வதேசத்திலும் ஒலிக்கும்.இன்று எமது கட்சிகளை உடைப்பதற்கும்,சின்னாபின்னமாக்
கடந்தகாலத்தில் தமிழ்மக்களின் பலமாக இருக்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகளை இந்த நாட்டில் உள்ள சிங்க பேரினவாதக் கட்சிகளும்,சர்வதேச நாடுகளும் தந்திரோபாயங்களை கையாண்டு சின்னாபின்னமாக்கியுள்ளார்கள்.