நிலவிவரும் விவசாய பெரும் போக செய்கையின் பயிர் நிலப்பிரதேசங்களில் வளர்க்கப்படும் கால்நடைகளை விவசாய செய்கைகளுகாக மேச்சல் தரைப்பகுதிகளில் பராமரிப்பிற்காக கொண்டு செல்வது வழக்கம் அந்தவகையில் மட்டக்களப்பிலிருந்து சுமார் 45 மையில் தொலைவில் அமைந்துள்ளது கருவாச்சோலை பெரியாறு எனும் கிராமம்.
அதனடிப்படையில் வவுணதீவு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கால்நடை வளர்ப்பவர்கள் தமது கால்நடைகளை குறித்த பகுதிக்கு கடந்த சில நாட்களில் கொண்டு சென்று தங்குமிட வசதிகள் அமைத்து கால்நடைகளை பராமரித்து வந்திருந்தனர்.
அந்தவகையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் கருவாச்சோலை பகுதியை அண்டிய மங்கள கமை கிராமத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த (சிங்கள) நபர் ஒருவர் காணாமல்போயிருந்துள்ளார் அதன் பிரகாரம் மங்களகமை பகுதியைச் சேர்ந்த இளைஞர்களும் பகுதி பொலிஸாருமிணைந்து நேற்றுமுன்தினம் கால்நடை வளர்ப்பிற்கான வந்திருந்த நான்குபேரை கைகளைக்கட்டி இழுத்துச்சென்று எதுவித விசாரணைகளுமின்றி துன்புறுத்தியுள்ளனர்.
பின்னர் அவர்கள் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஏதாவது அசம்பாவிதங்கள் நிகழக்கூடும் என்ற அச்சத்தால் தமது வாடிகளை விட்டு வெளியேறி தமது கால் நடைகளையும் கைவிட்ட நிலையில் தற்போது கொட்டும் மழையிலும் மரங்களின் கீழே சமைத்து சாப்பிட்டு மிகவும் கஸ்ரமான நிலையில் உள்ளார்கள்.
எனவே இந்த விடயம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
இப்பிரச்சைகள் தொடர்பாக தெரியப்படுத்தியபின்னர் மட்டக்களப்பு மாவட்ட தேசத்தின் வேர்கள் அமைப்பினர் குறித்த பகுதிக்கு சென்று நிலைமைகள் தொடர்பான உண்மைத் தன்மையினை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.