இனம் மதம் சாதி என்பதற்கு அப்பால் வலயத்தில் திறமைகாட்டுகின்ற மாணவர்களுக்கு முதலிடம் – வலயக்கல்விப் பணிப்பாளர்

 (சா.நடனசபேசன்) 

இனம் மதம் சாதி என்பதற்கு அப்பால் வலயத்தில்  திறமைகாட்டுகின்ற மாணவர்களுக்கு முதலிடம் வழங்கப்படும்.அத்தோடு கடின முயற்சியும் கடினபயிற்சியுமே வெற்றிக்கு உறுதுணையாக அமையும் என சம்மாந்துறை கல்விவலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் சகுதுல் நஜீம் தெரிவித்தார். 

இவ்வருடம்  வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வலயமட்டத்தில்  188 புள்ளிகளைப்பெற்று முதலாம் இடம்பெற்ற வேப்பையடிகலைமகள் வித்தியாலய மாணவி மு.ருஸ்மிக்கா அவர்களைப் பாராட்டி துவிச்சக்கரவண்டி பரிசாக வழங்கிவைக்கும் நிகழ்வு வலயக்கல்வி அலுவலக கேட்போர்கூடத்தில் 19 புதன்கிழமை நடைபெற்றபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள்,உதவிக்கல்விப்பணிப்பாளார்கள் கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் பாடசாலைகளின் அதிபர்கள் கலந்து சிறப்பித்தனர்.

அவர் தொடர்ந்து பேசுகையில்  திறைமையும் முயற்சியும் இருந்தால் பரீட்சையில் சாதனை நிலைநாட்டமுடியும் இதற்கு எடுத்துக்காட்டாக வேப்பையடி கலைமகள் வித்தியாலய மாணவி மு.ருஸ்மிகா திகழ்கின்றார்.வேப்பையடி கலைமகள் வித்தியாலயமானது மிகவும் தொலைவில் பல வளப்பற்றாக்குறைகளுடனும் போக்குவரத்து இல்லாத யானைகளின் தொல்லைகள போன்ற பல்வேறு பிரச்சினைகள் நிறைந்த  கிராமத்தில் நிலைநாட்டப்பட்ட சாதனையானது சாதாரணமானது அல்ல நகரப்;புறப்பாடசாலைகளில் சகலவசதிகளும் இருக்கின்றன அதனால் அங்குள்ள பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்களுக்குச்  சாதனை நிலைநாட்டுவது சாதாரண விடயம் ஆனால் கிராமப்புறப்பாடசாலைகளில் சாதனை நிலைநாட்டுவது வரலாற்றுச்சாதனையாக இருக்கின்றது.

இந்தச்சாதனையினை  வழிப்படுத்திய அதிபர் சீ.பாலசிங்கன் கற்பித்த ஆசிரியர் சா.நடனசபேசன் மற்றும் அம்மாணவியின் பெற்றோர்களையும் வலயத்தின் சார்பாக நாங்கள்  பாராட்டுகின்றோம்.

பரீட்சைப் பெறுபேறுகளை அதிகரிப்போம் என நாங்கள் ஆளுநரிடம் உறுதிமொழிவழங்கியிருந்தோம் அதன்பிராகாரம்  அதிபர்கள்,பாடசாலை இணைப்பாளர்கள், ஆசிரியர்களிடம் வலயக்கல்வி அலுவலகத்தினால் உறுதிமொழிபெற்று அதிபர் ஆசிரியர்களும் இணைந்து எமது வலயக்கல்வி அலுவலகமும் கடுமையாக உழைத்தோம் அதன் பயனால் இவ்வருடம் 64 வீதமானசித்தியினைப்பெற்று இருக்கின்றோம். அதிலும் நாவிதன்வெளிக் கோட்டப்பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திவீதம் அதிகரிக்கப்பட்டு இருக்கின்றது. இது கோட்டக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து, ஆசிரியர்களதும் வலயத்தினதும் கடினமுயற்சியாகும்.

இதே போன்று வலயத்தில் எதிர்காலத்தில் அடைவை அதிகரிப்பதற்காக பல பிரயத்தனங்களை நாம் அனைவரும் செய்யவேண்டும். இதற்கு அனைவரது பங்கும் முக்கியமானதாக இருக்கின்றது.இன்றைய நிலையில் அதிகமான வசதிபடைத்தவர்களது பிள்ளைகள் கல்வியில் அக்கறை செலுத்துவது குறைந்துசெல்கின்றது ஆனால் வசதி குறைந்தவர்களது பிள்ளைகள் கல்வியில் அக்கறைசெலுத்துவதுடன் சாதனைகளையும்; நிலைநாட்டுகின்றனர். இவ்வாறு வறுமையான பிரதேசத்தில் தந்தை வெளிநாட்டில் இருக்கும்போது கஸ்டத்தை உணர்ந்து தாயின் அரவணைப்பில் சாதனைபடைத்த மு.ருஸ்மிக்காவுக்கு இம்முறை துவிச்சக்கரவண்டியினை பரிசாக வழங்குகின்றோம் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்மாவட்டத்தில் முதலிடம் பெறும் மாணவருக்கு இதே போன்று துவிச்சக்கரவண்டி பரிசாக வழங்கப்படும் என வலயக்கல்விப்பணிப்பாளர் உறுதியளித்துள்ளார்

Related posts