முதலிடம் பெற்ற வேப்பையடி கலைமகள் வித்தியாலய மாணவிக்கு துவிச்சக்கரவண்டி வழங்கிவைப்பு.

இவ்வருடம்  வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வலயமட்டத்தில்  188 புள்ளிகளைப்பெற்று முதலாம் இடம்பெற்ற வேப்பையடிகலைமகள் வித்தியாலய மாணவி மு.ருஸ்மிக்கா அவர்களைப் பாராட்டி துவிச்சக்கரவண்டி பரிசாக வழங்கிவைக்கும் நிகழ்வு வலயக்கல்வி அலுவலக கேட்போர்கூடத்தில் 19 புதன்கிழமை நடைபெற்றபோது 

2018ஆம் வருடத்தில் தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதல் நிலையைப்பெறும் மாணவன்ஃமாணவிக்கு துவிச்சக்கர வண்டி ஒன்றினை வழங்குவேன் என சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களினால் கூறப்பட்டதற்கு இணங்க  வலயத்தில் முதலாமிடம் பெற்ற மாணவிக்கு பரிசாக துவிச்சக்கரவண்டி வலயக்கல்விப்பணிப்பாளரால் வழங்கிவைக்கப்பட்டது.இந்நிகழ்வில் வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள்,கணக்காளர்,உதவிக்கல்விப்பணிப்பாளார்கள் கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் பாடசாலைகளின் அதிபர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Related posts