அம்பாறை – உஹன பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இரு மாணவ குழுக்களுக்கிடையில் மோதல் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று மாலையில் இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 25 மாணவர்கள் காவல் துறையினரால் அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு பின்னர் நிபந்தனையில் பேரில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி பொது தராதர பத்திர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களே பாடசாலையில் இடம்பெறும் தவணை பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் இவ்வாறு மோதலில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.