ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நன்னாளில் 26 ஆம் திகதி குறித்த பிரதேசத்தில் வழங்கி வைக்கப்பட்டன.
அதனடிப்படையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் இந்து சமய தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்களுக்கு 13 பாதணிகள் 09 புத்தகப்பைகளும், மன்னார் கோவில்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்களுக்கு 28 புத்தகப்பைகளும், மன்னார் பேசாலை சென். மேரிஸ் வித்தியாலயம் மாணவர்களுக்கு 110 புத்தகப்பைகளும், மன்னார் பேசாலை துள்ளுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலை மாணவர்களுக்கு 31 பாதணிகளும், மன்னார் வெள்ளாங்குளம் கணேசபுரம் பாடசாலை மாணவர்களுக்கு 46 பாதணிகளும் ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இலங்கைக்கான நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.டிலான் தலைமையிலான செயற்பாட்டாளர்களினால் குறித்த பாடசாலைகளின் ஒன்றுகூடல் மண்டபத்தில் வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு கருத்தும் தெரிவித்த மன்னார் பேசாலை சென். மேரிஸ் வித்தியாலய அதிபர் உண்மையிலேயே மன்னார் மாவட்டம் என்பது கடந்த கால யுத்த சூழ் நிலையில் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டமாகும் அந்தவகையில் யுத்த நிறைவிக்கு பின்னர் நடைபெற்ற அபிவிருத்திகளின் பிரகாரம் ஒருசில பாடசாலைகள் மட்டும் நடுத்தர நிலையில் காணப்படுகின்றது.
எமது மாவட்ட பாடசாலைகளில் உள்ள குறைகளை உங்களைப்போன்ற அரச சார்பற்ற தன்னார்வ நிறுவனங்கள் முன்வந்து வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு உதவி செய்கின்றனர் அதன் பிரகாரம் இன்றைய தினம்
எனது பாடசாலைக்கு வருகைதந்து பாதணிகளையும் புத்தகப்பைகளையும் வழங்கி வைத்துள்ள ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு நன்றியும் தெரிவிப்பதுடன் இக்கற்றல் உபகரணங்களை வழங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்த அனைத்து ஜேர்மன் வாழ் மக்களுக்கும் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என கருத்துத் தெரிவித்திருந்தார்  .
அத்துடன் அந்தவகையில் மன்னார் மாவட்டத்திற்கான கல்விக்கான செயற்திட்டத்தில் 209,580/= ரூபா பெறுமதியான பாதணிகள் மற்றும் புத்தகப்பைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts